இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ஸ்பெயினின் கரோலினா காயத்தால் பாதியில் விலகினார். இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பைனலில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, ‘நம்பர்-4’ வீராங்கனையான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர் கொண்டார். முதல் செட்டில் கரோலினா 9-3 என முன்னிலையில் இருந்தார். அப்போது, இவர் செய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது, தவறிவிழுந்தார். வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலியால் துடித்தார். சில நிமிடத்தில் மீண்டு வந்தபோதும், வலி அதிகமாக கண்ணீர் விட்டு அழுதார். போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து, செய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார்.
Read MoreCategory: தமிழ்
TAMIL
24 மணிநேரத்தில் ராமர் கோவில் பிரச்னையை தீர்ப்போம் : யோகி
அயோத்தி வழக்கை எங்களிடம் ஒப்படைத்தால் ராமர் கோயில் பிரச்னையை 24 மணிநேரத்தில் தீர்ப்போம் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், உபி.,யின் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைந்து முடிக்க வேண்டும். முக்கிய அமைப்புக்கள் தேவையில்லாமல் இது போன்று தாமதித்தால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வழங்க முடியவில்லை என்றால், அந்த வழக்கை எங்களிடம் ஒப்படையுங்கள். ராம் ஜென்மபூமி பிரச்னையை நாங்கள் 24 மணி நேரத்தில் தீர்ப்போம். 25 மணி நேரம் கூட நாங்கள் எடுத்துக் கொள்ளமாட்டோம். லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு கோரிக்கை வைக்கிறோம். இது போன்ற தேவையற்ற…
Read Moreரூ.1.50 லட்சத்தில் உடை, டிராவல் பை பிரியங்கா சோப்ராவின் செல்ல நாய்க்கு வசதிகள்
பிரபல இந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா. ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். குவாண்டிகா தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ளார். இவருக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது ‘ஸ்கை இஸ் பிங்’ என்ற இந்தி படத்திலும் ‘இஸ் நாட் ரொமான்டிக்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. அதன் பெயரிலேயே டைரிஸ் ஆப் டயானா என்ற பக்கத்தை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார். அதை 93 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். செல்ல நாயுடன் அதிக நேரம் செலவிடுகிறார். ஷாப்பிங் செல்லும்போதும் கூடவே அழைத்து செல்கிறார். இப்போது அந்த நாய்க்கு விசேஷமாக வடிவமைத்த…
Read More5ஜியில் தெறிக்கவிட வரும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்.!
எல்ஜி நிறுவனம் ஏராளமான ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களையும் எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றது. இந்தியாவில் 5ஜி சேவை: இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி சேவையை துவங்க இருக்கின்றன. இதன் மூலம் வீடியோ கால், அதிவேக இணையதளம் உள்ளிட்டவைகளை நாம் பெற முடியும். இது சூப்பர் ஹைவே எனப்படுகின்றது. வரும் 25ம் தேதி அறிமுகம்: எல்ஜி நிறுவனம், அதன் 5ஜி போனை வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் எம்.டபிள்யூ.சி மாநாட்டில்வெளியிட உள்ளது. இந்த போன்கள் Qualcomm Snapdragon 855 என்ற புதியவைகை சிப்செட்டில் இயங்குகிறது. ஸ்மார்ட்போன்: 855 சிப்செட்டில் 5ஜி இயக்கம்: எல்ஜி வெளியிட உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்கள் Qualcomm…
Read Moreசருமத்தில் மரு…போக்குவது எப்படி?
கொலாஜன், ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவற்றை போக்க வழிகள் என்னென்ன எனப் பார்ப்போம். கொலாஜன், ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவற்றை போக்க வழிகள் என்னென்ன எனப் பார்ப்போம். தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும். அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில்…
Read Moreலோக்சபா தேர்தலில் மின்னணு இயந்திரம்: தேர்தல் ஆணையம் உறுதி
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் பயன்படுத்தப்படும். ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும். இயந்திரம் குறித்த விமர்சனம் மற்றும் கருத்துகளை, கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறலாம். அதனை வரவேற்கிறோம். அதேநேரம், அச்சுறுத்தல், மிரட்டலுக்காக தற்போதைய முறையை விட்டுவிட்டு, ஓட்டுச்சீட்டு சகாப்தத்திற்கு செல்ல மாட்டோம். என்று அவர் பேசினார்.
Read Moreவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா?
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இந்த படத்தில், சமந்தா, பிகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எனவே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்திருக்கிறாராம். முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு…
Read Moreசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.!
இந்த ஆண்டிற்கான சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வருகிறது. தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அணைத்து நிறுவனங்களும் தங்களின் சேவைகளை மிக மலிவான கட்டணத் திட்டங்களின் கீழ் வழங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களில் பல மாற்றங்களை அணைத்து நிறுவனங்களும் மாற்றம் செய்து வருகின்றது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களுடன் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி பயனைப் பயனருக்கு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ்…
Read Moreஉங்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?
இந்தியாவில் சமீப காலங்களில் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் மிகவும் அவசியமான அடையாள சான்றாக ஆதார் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அறிக்கையில், UIDAI மற்றும் மத்திய அரசு இணைந்து ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்கும் வழிமுறையை கட்டாயமக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் இந்தியா முழுக்க அனைவரும் ஒற்றை ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கடுமையாக செயல்படுத்த இருக்கிறது. ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதன் மூலம் ஒருவரின் அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்பதால் நாடு முழுக்க பல்வேறு ஓட்டுனர் உரிமங்களை பெற முடியாத சூழல் ஏற்படும். ஓட்டுனர் உரிமம் அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரேதசங்களின் சாலை போக்குவரத்து துறையால் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை மாறும். எனினும், இதற்கான அடிப்படை அம்சங்கள் ஒன்று…
Read Moreஅஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
இந்தியில் ஹிட்டான பிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் தல 59. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இது அவருக்கு முதல் படமாகும். இந்நிலையில் அஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து வித்யா பாலன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவர் கேட்டுக்கொண்டதால் தான் தல 59 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் பிறந்திருந்தாலும் வித்யாபாலனின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இங்கு அமையவில்லை.…
Read More