அயோத்தி வழக்கை எங்களிடம் ஒப்படைத்தால் ராமர் கோயில் பிரச்னையை 24 மணிநேரத்தில் தீர்ப்போம் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், உபி.,யின் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைந்து முடிக்க வேண்டும். முக்கிய அமைப்புக்கள் தேவையில்லாமல் இது போன்று தாமதித்தால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வழங்க முடியவில்லை என்றால், அந்த வழக்கை எங்களிடம் ஒப்படையுங்கள். ராம் ஜென்மபூமி பிரச்னையை நாங்கள் 24 மணி நேரத்தில் தீர்ப்போம். 25 மணி நேரம் கூட நாங்கள் எடுத்துக் கொள்ளமாட்டோம். லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு கோரிக்கை வைக்கிறோம். இது போன்ற தேவையற்ற தாமதங்களால் மக்களிடையே பிரச்னைகள் ஏற்படவே வாய்ப்புள்ளது.
அயோத்தி விவகாரத்தை தீர்க்க காங், விரும்பவில்லை. அயோத்தி பிரச்னை தீர்ந்து விட்டால், முத்தலாக் தடையும் அமலாகும். அதன் பிறகு மதரீதியிலான அரசியல் இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். 70 சதவீதம் வாக்காளர்கள் பா.ஜ., பக்கமே உள்ளனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் மெகா கூட்டணி பக்கம் உள்ளனர். பிரியங்காவிற்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது, குடும்பத்திற்காகவே கட்சி என காங்., நினைப்பதையே மறுபடியும் நிரூபித்துள்ளது என்றார்.