புதுடில்லி: லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் பயன்படுத்தப்படும். ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும். இயந்திரம் குறித்த விமர்சனம் மற்றும் கருத்துகளை, கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறலாம். அதனை வரவேற்கிறோம். அதேநேரம், அச்சுறுத்தல், மிரட்டலுக்காக தற்போதைய முறையை விட்டுவிட்டு, ஓட்டுச்சீட்டு சகாப்தத்திற்கு செல்ல மாட்டோம். என்று அவர் பேசினார்.