எல்ஜி நிறுவனம் ஏராளமான ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களையும் எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் 5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றது.
இந்தியாவில் 5ஜி சேவை:
இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி சேவையை துவங்க இருக்கின்றன. இதன் மூலம் வீடியோ கால், அதிவேக இணையதளம் உள்ளிட்டவைகளை நாம் பெற முடியும். இது சூப்பர் ஹைவே எனப்படுகின்றது.
வரும் 25ம் தேதி அறிமுகம்: எல்ஜி நிறுவனம், அதன் 5ஜி போனை வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் எம்.டபிள்யூ.சி மாநாட்டில்வெளியிட உள்ளது. இந்த போன்கள் Qualcomm Snapdragon 855 என்ற புதியவைகை சிப்செட்டில் இயங்குகிறது.
ஸ்மார்ட்போன்:
855 சிப்செட்டில் 5ஜி இயக்கம்: எல்ஜி வெளியிட உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்கள் Qualcomm Snapdragon 855 என்ற சிப்செட்டில் இயங்குகிறது. இது எல்ஜியின் முந்தைய ‘predecessor‘ விட 45 சதவிகிதம்வேகமாக செயல்படும். அதிகரெசலூஷன் கொண்ட ஆன்லைன் விளையாட்டுகளை இந்த போன்களில் விளையாட முடியும்.
எம்.டபிள்யூ.சி மாநாடு பிப்ரவரி 25 தொடங்கி 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாட்டில், முன்னணி மொபைல் நிறுவனங்கள், அதன் புதிய மாடல் போன்களை வெளியிடும். அதேபோன்று இந்த வருடம் எல்ஜி அதன் 5ஜி போன்களை வெளியிட உள்ளது.
4000 எம்ஏஹெச் பேட்டரி: ‘vapor chamber’ என்ற பாதுகாப்பு சேம்பரை இந்த போன்கள் கொண்டுள்ளது. இது எல்ஜி-ன் முந்தையை V40 ThinQ விட 2.7 மடங்கு பெரியது. இந்த போனில் அதிக நேரம் பேசினாலும்கூட போன் சூடாகாது. ‘vapor chamber’ தொழில்நுட்பமானது போன் சூடாவதை கட்டுப்படுத்தும். இந்தபோன் 4,000 எம்ஏஎஹெச் பேட்டரியை கொண்டது.