இந்த ஆண்டிற்கான சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வருகிறது. தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அணைத்து நிறுவனங்களும் தங்களின் சேவைகளை மிக மலிவான கட்டணத் திட்டங்களின் கீழ் வழங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களில் பல மாற்றங்களை அணைத்து நிறுவனங்களும் மாற்றம் செய்து வருகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோவின் இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களுடன் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி பயனைப் பயனருக்கு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 365 நாட்களுக்கு 547.5 ஜிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜியோ பிரைம் வாடிக்கையாளர் சேவையை பெறுவதற்கு கூடுதலாக வெறும் ரூ.99 மட்டும் செலுத்தினால் போதும், மொத்தமாக ரூ.1,798 என்ற விலையில் ஒரு வருடத்திற்கான இச்சேவையை பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
வோடபோன் வழங்கும் ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் இன் இந்த ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டம் மும்பை வட்டாரத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி, 4 ஜி டேட்டா சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் சேவை மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மலிவான விலையில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி தொலைக்காட்சி, திரைப்படங்கள், இசை மற்றும் பல டிஜிட்டல் உள்ளடக்கச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மலிவான விலையில் இத்திட்டம் கிடைக்கிறது. இலவச காலர் டியூன் மற்றும் அன்லிமிடெட் பாடல்கள் போன்ற சேவைகள் மட்டுமே பிஎஸ்என்எல் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல், வோடபோன், மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்று டிஜிட்டல் சேவைகள் எதுவும் இலவசமாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் வழங்கும் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் இதுவரை வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவிக்கவில்லை. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகப்படியான வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ.509 திட்டத்தில் தினமும் 1.4ஜிபி, 4ஜி டேட்டா சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் என அதிகப்படியாக வெறும் 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏர்டெல் டிவி, ஏர்டெல் விங்க் மியூசிக் போன்ற சேவைகளை இந்நிறுவனம் இலவசமாகத் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.