விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இந்த படத்தில், சமந்தா, பிகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எனவே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்திருக்கிறாராம்.
முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சிலப்பல காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நாயகிகள் நடிக்கத் தயங்கும் ஆபாசப்பட நாயகி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் துணிச்சலாக நடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் குமாரராஜா தியாகராஜனின் இந்த தகவலால் சூப்பர் டீலக்ஸ் படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.