எனர்ஜைசர் எனும் மொபைல் நிறுவனம், இதுவரை இல்லாத அளவு, 18,000 எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை தயாரித்துள்ளது. அதற்கு, எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி18கே பாப் என பெயரிட்டுள்ளது.
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேல்டு காங்ரஸ் நிகழ்ச்சியில், எனர்ஜைசர் நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்தது. இந்த மெகா சைஸ் பேட்டரி கொண்ட ஃபோனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் தேவைப்படும். முழுமையாக சார்ஞ் செய்யப்பட்ட நிலையில், இந்த ஃபோன் குறைந்தபட்சம் 10 நாள் தாக்குபிடிக்குமாம். பெரிய பேட்டரி என்பதால், இந்த ஃபோன் 18 எம்.எம் அளவிற்கு அடர்த்தியாகக் காணப்படுகிறது.
மற்ற சிறப்பம்சங்கள் :
P18K-வில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போட், 6.2 இன்ச் எல்.சி.டி ஸ்கிரீன்,6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளது. இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஃபோன், உலகின் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக இருக்கும்.