சூடானில் ரொட்டி விலைக்கு எதிராக போராட்டம்; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்து உள்ளது.

சூடான் நாட்டில் கடந்த டிசம்பரில் மக்கள் சாப்பிட கூடிய ரொட்டியின் விலை உயர்வு மற்றும் பொது பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த போராட்டங்களில் கடந்த 21ந்தேதி வரை 24 பேர் பலியாகினர்.  200 பேர் காயமுற்றனர் என தகவல் துறை சார்ந்த மந்திரி ஹசன் இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்து உள்ளது என நாட்டின் போராட்ட நிலையை விசாரணை மேற்கொள்ளும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அகமது இப்ராகிம் கூறியுள்ளார்.

சூடானின் கத்தரீப் மற்றும் அத்பரா ஆகிய நகரங்களை சேர்ந்த பொதுமக்கள் முதலில் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.  இந்த போராட்ட சம்பவங்களை தொடர்ந்து சூடான் நாட்டு அதிகாரிகள் எண்ணற்ற நகரங்களில் நெருக்கடி நிலையை அறிவித்தனர்.

 

Share This News

Related posts

Leave a Comment