மின்சார சார்ஜிங் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

டப்ளின்: அயர்லாந்தின் சுற்றுச்சூழல்-இனைந்த வாகனங்கள் ஊக்குவிக்கும் விதமாக மின்சார சார்ஜிங் நிலையங்கள் அதிகமாக உருவாக உள்ளன. ஒரு நேரத்தில் 10 வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை 50 யூனிட்களுக்கு அதிகரிக்கப்படும்.அதே நேரத்தில் பிஸியாக உள்ள நெடுஞ்சாலைகளில் சார்ஜ் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ESP மற்றும் தேசிய போக்குவரத்து துறைகளால் இணைந்து தொடங்கப்படும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் திட்டத்திற்கான செலவினம் 20 மில்லியன் யூரோக்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.100 கிமீ மைலேஜ் வரை செல்ல தேவையான சார்ஜ் 6 நிமிடம் செய்தல் போதுமானது.காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் படி, போக்குவரத்து துறை அயர்லாந்தில் வாயு மாசுபாட்டு உமிழ்வுகளின் 20 சதவிகிதத்தை வெளிப்படுத்துகிறது. காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சுற்றுச்சூழல்-இனைந்த போக்குவரத்து அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.தேசிய போக்குவரத்து ஆணையம் வரும் ஆண்டுகளில் ஐரிஷ் வீதிகளில் இருந்து…

Read More

போயிங்’ விமானங்களுக்கு தடை

இந்தோனேஷியாவில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம், கடந்தாண்டு விபத்துக்கு ள்ளானதில், 189 பேர் பலியாகினர். சமீபத்தில், இதே ரக விமானம், எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில், 157 பேர் உயிரிழந்தனர்.இதனால், இந்த ரக விமானங்களின் இயக்கத்துக்கு, பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட நாடுகள், தடை விதித்தன. நம் நாட்டிலும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவை நிறுத்தப்படுவதாக, விமான போக்குவரத்து துறை அறிவித்தது.போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பும் தடை விதித்துள்ளார்.அமெரிக்கர்களின் நலனுக்காகவே இந்த முடிவு என தெரிவித்தார். மேலும் போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரினை அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Read More

18,000 Mah பேட்டரி கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்..!!

எனர்ஜைசர் எனும் மொபைல் நிறுவனம், இதுவரை இல்லாத அளவு, 18,000 எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை தயாரித்துள்ளது. அதற்கு, எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி18கே பாப் என பெயரிட்டுள்ளது. கடந்த வாரம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேல்டு காங்ரஸ் நிகழ்ச்சியில், எனர்ஜைசர் நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்தது. இந்த மெகா சைஸ் பேட்டரி கொண்ட ஃபோனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் தேவைப்படும். முழுமையாக சார்ஞ் செய்யப்பட்ட நிலையில், இந்த ஃபோன் குறைந்தபட்சம் 10 நாள் தாக்குபிடிக்குமாம். பெரிய பேட்டரி என்பதால், இந்த ஃபோன் 18 எம்.எம் அளவிற்கு அடர்த்தியாகக் காணப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்கள் : P18K-வில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போட், 6.2 இன்ச் எல்.சி.டி ஸ்கிரீன்,6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளது. இன்னும் சில…

Read More

இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day).

சர்வதேச மகளிர் தினம் (IWD) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. 1917 ல் சோவியத் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்ற பிறகு, மார்ச் 8 அங்கு ஒரு தேசிய விடுமுறையாக மாறியது. 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளும் வரையில் கம்யூனிச நாடுகளும் சோசலிஸ்ட் இயக்கங்கலிளும் இந்த நாள் முக்கியமாக கொண்டாடப்பட்டது.இது ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) மகளிர் உரிமைகள் மற்றும் சர்வதேச அமைதி தினம் எனவும் அழைக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கப்பட்டது? 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும்…

Read More

இன்று முதல் “கிரீன் கார்டுக்கு” விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் “கிரீன் கார்டுக்கு” விண்ணப்பிக்கலாம் நோர்தன் அயர்லாந்திற்க்கோ அல்லது யு.கெ க்கோ நீங்கள் வாகனம் ஓட்டிச்செல்ல உங்களுக்குதேவையான கிரீன் கார்டு க்கு இன்று முதல் நீங்கள் வண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம். நோர்தன் அயர்லாந்திலோ அல்லது யு.கெ யிலோ வாகனம் ஓட்ட உங்களது வாகன காப்பபீடு அனுமதிக்கிறது என்பதை உறுதி செய்வதே இந்த “கிரீன் கார்டு”. “பல்வேறு மோட்டார் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தரகர்கள் ஆகியவற்றிற்கான 4 லட்சத்திற்கும் மேற்பட்ட “கிரீன் கார்டு” அயர்லாந்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவால் (MIBI) ஆல் அனுப்பப்பட்டுள்ளன. “கிரீன் கார்டு” குறைந்தபட்சம் 15 நாட்கள் செல்லுபடியாகும்.அதிகபட்சம் ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு காலம் முடிவடையும் வரை “கிரீன் கார்டு” செல்லுபடியாகும். எனவே தாமதம் வேண்டாம்… இன்றே உங்கள் வாகன காப்பீடு நிறுவனத்தை அழைத்து “கிரீன் கார்டு” ஐ பெறுங்கள் .

Read More

இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்

இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் 1 /3/2019  இரவு 9 மணிக்கு இந்திய எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகளிடம், பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Read More

இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்.

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்  அபிநந்தன்  நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர்  இம்ரான் கான் அறிவித்து உள்ளார்.  அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Read More

பாக்., விமானத்தை தகர்த்துவிட்டு குதித்த அபிநந்தன்

விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று(பிப்.,27) பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் – 16 விமானங்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி 7 கி.மீ., தூரம் நுழைந்தன. இந்தியாவில் 4 இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது. பாகிஸ்தான் விமானங்கள், இந்திய பகுதிக்குள் நுழைந்ததை பார்த்ததும், அங்கிருந்த நமது போர் விமானமான மிக் 21 விமானங்கள் உடனடியாக விரட்ட துவங்கின. இதனையடுத்து எப் – 16 விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்ப துவங்கின. இருப்பினும், அவற்றை, இந்திய போர் விமானங்கள் விரட்டின. அபிநந்தன் சென்ற மிக்- 21 போர் விமானம், எப் – 16 விமானங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. அவரது விமானம் தாக்கப்பட்டது. நொறுங்கி விழுவதற்கு முன்னர், அபிநந்தன், ஆர் 73 ஏவுகணை மூலம் எப் – 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர்…

Read More

ஒரு கோடி பேருடன் பேசுகிறார் பிரதமர் மோடி

பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதாவது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் வரும் 28ம் தேதி பா.ஜ., ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை நடத்த உள்ளார்,”இந்த பேச்சு, உலகளவில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்பட்ட, மிகப்பெரிய கலந்தாலோசனை நிகழ்வாக இது இருக்கும்,” நாடு முழுவதும், 15 ஆயிரம் இடங்களில், ஒரு கோடி பேரிடம், வீடியோ கான்பரன்ஸ் முறையில், மோடி பேச உள்ளதாகவும் ‘நமோ ஆப்’ மூலம், தங்கள் கேள்விகளை, மக்கள் அனுப்பலாம் என்றும், அவர் தெரிவித்தார்.   Sponsored

Read More

பிரெக்சிட் க்கு பிறகு டிரைவிங்

2019 மார்ச் 29 அன்று பிரெக்சிட் நிலவில் வந்தபிறகு நீங்கள் நோர்தன் அயர்லாந்திற்க்கோ அல்லது யு.கெ க்கோ  நீங்கள் செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் கவனமாக இருங்கள். அயர்லாந்து ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் வட அயர்லாந்திலும் அல்லது  யு.கெ யிலும்  சவாரி செய்ய முடியாது. ஒப்பந்தம் இல்லாத  பிரெக்சிட் தான் வருகிறது என்றால் மோட்டார் காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் “பச்சை அட்டை” என்று அழைக்கப்படும் ஒரு அட்டை இருந்தால் தான்  பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தில் செல்லமுடியும். வட அயர்லாந்திலும் பிரிட்டனிலும் செயல்படும் காப்பீட்டை உறுதிசெய்யவதுதான் இந்த  “பச்சை அட்டை”. பல்வேறு மோட்டார் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தரகர்கள் ஆகியவற்றிற்கான 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சை அட்டைகள் அயர்லாந்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவுக்கு (MIBI)  ஆல் அனுப்பப்பட்டுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள் இதை மார்ச் முதல் மாதத்தில் இருந்து ஓட்டுனர்களிடம்…

Read More