இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day).

சர்வதேச மகளிர் தினம் (IWD) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. 1917 ல் சோவியத் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்ற பிறகு, மார்ச் 8 அங்கு ஒரு தேசிய விடுமுறையாக மாறியது. 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளும் வரையில் கம்யூனிச நாடுகளும் சோசலிஸ்ட் இயக்கங்கலிளும் இந்த நாள் முக்கியமாக கொண்டாடப்பட்டது.இது ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) மகளிர் உரிமைகள் மற்றும் சர்வதேச அமைதி தினம் எனவும் அழைக்கப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கப்பட்டது?

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் அரசின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

தற்போது ரஷ்யாஉட்பட பல நாடுகளில்  சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், ” பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிக்க  வேண்டும் என்று உறுதி கொள்வோம்” என்பதே ஆகும்.

Share This News

Related posts

Leave a Comment