அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்து உள்ளார். அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.