திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய கணவர் ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் 6 ஆண்டுகள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர். இந்நிலையில் ரன்வீர் தன் மனைவி பற்றி கூறியிருப்பதாவது,
திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறிவிடவில்லை. என் வாழ்வில் நடந்த நல்ல விஷயம் என்றால் அது தீபிகாவை திருமணம் செய்தது தான். அனைத்து முடிவு எடுக்கும் பொறுப்பை தீபிகாவிடம் விட்டுவிட்டேன். அதில் அவர் கில்லாடி.
திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளார் தீபிகா. வீட்டிற்கு லேட்டாக வரக் கூடாது, சாப்பிடாமல் வெளியே செல்லக் கூடாது, போன் செய்தால் அதை மிஸ்டு காலாக்கக் கூடாது என்று தீபிகா கறாராக தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் அவராக இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார் ரன்வீர் சிங்.