எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜாங் யுன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்தித்துப் பேசும் 2-வது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும்…
Read MoreCategory: தமிழ்
TAMIL
டப்ளினில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு
டப்ளினில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கி சூடுடானது காலை 6 மணியளவில் டார்டேலேலில் உள்ள மாரிகோல்ட் க்ரெஸண்ட் பகுதியில் நடந்தது. ஒரு வீட்டின் வெளியே பல முறை சுடப்பட்டார். ப்யூமௌன்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக அவர் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் முதலுதவி செய்யப்பட்டார். இவர்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
Read Moreமானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது.சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் முக்கியமாக பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. .ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைவார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read Moreஜி.பி. சேவைகளின் போதிய நிதிக்காக டாக்டர்கள் போராட்டம் !
ஜி.பி. பாதுகாப்பு அமைப்பில் சிறந்த முதலீட்டிற்கு அழைப்பு விடுத்து இன்று பிற்பகல் டப்ளினில் குடும்ப மறுத்துவர்கள் ஒரு தேசிய எதிர்ப்பு போராட்டம் நடத்துகின்றனர். GP களின் தேசிய சங்கம் கூறுகையில் Dáil க்கு வெளியில் சுமார் 300 உறுப்பினர்கள் போராட்டத்த்தில் பங்கு பெறுகிறார்கள் என்று கூறினார்கள். இந்த அமைப்பு 2000 மெம்பர்களை கொண்டதாகும், அவர்கள் கூறுகையில் அரசு போதிய நிதி ஒதுக்கப்படாததால் பொது மருத்துவமானது முடக்கிகிய நிலையில் உள்ளது டாக்டர் ஆண்ட்ரூ ஜோர்டன், NAGP தலைவர், இந்த சேவைக்கான வருடாந்திர நிதியுதவி € 1 பில்லியன் யூரோ வாக இருக்க வேண்டும், தற்போதைய யூரோ € 555m ஆக உள்ளது அரசாங்கம் பொது நடைமுறைகளை “கொலை செய்வதாக” அவர் கூறினார், பொது நடைமுறை இறந்து கொண்டிருப்பதை அமைச்சர்களுக்கு முன்னிலைப்படுத்த டாக்டர்களுக்கு இருக்கும் ஒரே வழி போராட்டம் ஆகும்.…
Read Moreபிரபல தெலுங்கு நடிகை தற்கொலை
ஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட நேரமாக வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அவருடைய சகோதரன் கதவை திறக்ககோரியும் பதில் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜான்சி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜான்சியின் கைப்பேசியை கைப்பற்றிய போலீஸ் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஜான்சி உயிரிழப்பதற்கு முன்னதாக நீண்ட நேரமாக ஆண் ஒருவருடன் மொபைல் சேட் செய்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருடன் 6 மாதங்களுக்கு முன்பாக ஜான்சிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ஜான்சியின் மொபைலை பறிமுதல் செய்த போலீசார் தகவல்களை…
Read Moreஅணுஆயுதங்கள் கிம்மிடம் இருக்கிறது,ஐ.நா உறுதி.!
நேற்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை 15பேர் கொண்ட குழு வெளியிட்டுள்ளது. அதில் வடகொரிய அணுஆயுதங்களை பாதுகாக்கிறது எனவும்,அவற்றை எந்த ராணுவத்தாலும் அழிக்க முடியாதவாறு அந்நாடு வைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம்முடனான உறவில் முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு வடகொரியா தரப்பில் இன்னும் பதில் தரப்படவில்லை, முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதணைகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின்…
Read Moreகுழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி.
டப்ளின்: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், குழந்தைகளுக்காக ஒரு நாள். குழந்தைகளுக்கான ஓவிய போட்டியானது OICC அயர்லாந்து சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., காந்திஜியின் 150 வது பிறந்த நாள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளால் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, டப்ளின், தாலாவில் உள்ள பிளாசா ஹோட்டலில் OCC அயர்லாந்தின் நடத்தும் விழாவில் ஓவிய போட்டியானது நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி 15, 2019 பிளாசா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 4 PM க்கு போட்டிகள் தொடங்கப்படும். இந்திய மற்றும் ஐரிஷ் பிரபலங்களை உள்ளடக்கிய மேடையில் போட்டியில் ஜெயித்தவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். 5-9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கலரிங் போட்டியும் 10- 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஓவிய போட்டியும் நடைபெறும்.போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள குழந்தைகளின் பெயர்கள் போட்டி நடைபெறுவதற்ற்கு முன்பாக பதிவு செய்யப்பட வேண்டும்..பெயர்…
Read Moreநியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி 4வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி தொடரையும்…
Read Moreஇனி முதல் அயர்லாந்தில் ஓட்டுநர் உரிமம் பெற EDT ஆறு வகுப்புகள் போதும் !
முதல் முறையாக லேனர் பெர்மிட் வைத்திருப்பவர்கள் (கார்கள், மோட்டார் சைக்கிள்கள்) வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பாக ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். தற்போதைய மற்றொரு நாட்டின் முழுமையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதற்க்கு தற்போதைய நாட்டிற்கு உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் அந்த நாட்டில் உள்ள உரிமம் வழங்கிய அதிகாரியிடமிருந்து உரிமத்தின் ஒரு கடிதம்(letter of entitlement). இவைஐ NDLS அலுவலகத்திற்கு அனுப்பினால் போதுமானது https://www.youtube.com/watch?v=bAHzjNyItKY Please see NDLS website for full information. 21 ஜனவரி 2019 ஆம் தேதி முதல் , ஆர்.எஸ்.ஏ வெளிநாட்டு உரிமையாளர்களுக்கு ஒரு சிறிய EDT திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அயர்லாந்துடன் பரிமாற்ற உடன்படிக்கை இல்லாத வேறு நாட்டிலிருந்து முழு உரிமம் பெற்றவர்களுக்கு (EDT) 2,3,4,8,11 மற்றும் 12.…
Read Moreசிறுமி விவகாரத்தில் நடிகை பானுப்ரியா விளக்கம்!
நடிகை பானுப்ரியா தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமியைக் கொடுமை படுத்துவதாகச் சிறுமியின் தாய் ஆந்திராவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் செய்திதான் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. சிறுமியின் தாய் பிரபாவதி அளித்த புகார் மனுவில், “ ‘கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக என் மகளை நடிகை பானுப்ரியா சென்னை அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் செல்வதற்கு முன்பு 10,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஒரு மாதம்கூட சம்பளம் வழங்கவில்லை. என் மகளைப் பார்ப்பதற்காகக் கடந்த 19-ம் தேதி நான் சென்னை சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் மகளைப் பார்க்கவிடவில்லை. என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அவரிடமிருந்து என் மகளை மீட்டுத்தாருங்கள்’ என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடந்தவற்றை தெரிந்துகொள்ள நடிகை…
Read More