மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் காலை இறை வணக்கத்திற்கு பின் சர்ச் ஒன்றில் நடந்த இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 8 பேர் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்மேற்கே சூலு நகரில் அமைந்த ஜோலோ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று இறை வணக்கம் நடந்தது. இந்த நிலையில் காலை 8 மணியளவில் ஆலயத்தில் இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குள்ள மின்டானாவோ நகரில் முஸ்லிம் பிலிப்பினோக்களுக்காக சுயாட்சி பகுதி உருவாக்கத்திற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜோலோ ஆலயம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் 15 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று இந்த சட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேறியது.
இந்நிலையில், கிறிஸ்தவ ஆலயத்தின் மீது கொடூர வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன.