காந்திஜி ன் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று டப்ளின், தாலாவில் உள்ள பிளாசா ஹோட்டலில் நடத்தப்படுகிறது. காந்திஜியின் 150 வது பிறந்த நாள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளால் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இத்துடன் OICC அயர்லாந்து சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகள் இன்று 15 பெப்ருவரி 2019 வெள்ளிக்கிழமை 4 மணிக்கு பிளாசா ஹோட்டலில் ஆரம்பமாகும்.
போட்டிகள் முடிந்தபின் இந்திய மற்றும் ஐரிஷ் பிரபலங்களை உள்ளடக்கிய மேடையில் போட்டியில் ஜெயித்தவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும்.3-9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கலரிங் போட்டியும் 10- 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஓவிய போட்டியும் நடைபெறும் கலரிங் மற்றும் பேய்ட்டிங் போட்டிக்கான கிட்டுகள் ஸ்பான்ஸர் செய்திருப்பது அயர்லாந்தில் உள்ள இந்தியன் எம்பசி ஆகும். இதற்க்கு உறுதுணையாக இருந்த இந்தியன் அம்பாஸிடர்க்கு OICC அயர்லாந் சென்ட்ரல் கம்மிட்டி மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறது.
போட்டிகள் முடிந்தபின் 6 மணிக்கு பொது சம்மேளனம் பிளாசா ஹோட்டலில் உள்ள ஹாலில் நடைபெறும்,வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க,பொதுமக்கள் மறுவாழ்வுக்கு பெரும்பங்காற்றிய பொது ஊழியர்களில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்ட “கேரள மறுசீரமைப்பு சிறப்பு விருது” வென்ற நபரின் பெயர் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
பொது கூட்டத்திற்குப் பிறகு, அயர்லாந்தில் கலைஞர்கள் பங்குபெறும் கலைநிகழிச்சிகள் நடைபெறும். இந்திய ஃப்யூஷன் நாத லயம்; டீம் சிம்பொனி டப்ளின் வழங்கும் கரோக் மெட்லி, ஸ்ரீதி லயம் இந்திய ஃப்யூஷன் ஆகிய கலைநிகழிச்சிகள் நடைபெறும்.
இதில் பங்கேற்க அயர்லண்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களையும் குழந்தைகளையும் உளமாற அழைப்பதாக OICC ப்ரெசிடெண்ட் ஸ்ரீ பிஜு செபாஸ்டியன் மற்றும் OICC ஜெனரல் செக்க்ரெட்ரி ஸ்ரீ அனீஸ் கே. ஜோய் என்பவர்கள் கூறினார்கள்.
விழா மற்றும் போட்டியின் மேலும் விவரங்களுக்கு,
0877888374
0894186869
0879116831