கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
கேரட் – 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது )
எலுமிச்சை பழம் – ஆறு
பச்சை மிளகாய் – இருபது (பொடியாக வெட்டியது )
பெருங்காயம் – ஒரு தேகரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
கடுகு – 1 1/2 தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து இவற்றுடன் கேரட் கலவையை கொட்டி கிளறி எடுத்தால் கேரட் ஊறுகாய் ரெடி.