இந்திய டெலிகாம் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியினால் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களையும் பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.
ஜியோவின் ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அதிகப்படியான டாக் டைம் சேவையைப் பயனர்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான் ஏர்டெல்:
ரூ.100 ரீசார்ஜ் பிளான் பிரத்தியேகமாக அதிக டாக் டைம் பயன்படுத்தும் பயனருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் இன் இந்தத் திட்டம் பயனருக்கு ரூ.81.75 டாக் டைம் சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.500 புதிய திட்டம்:
அதே போல ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.500 புதிய திட்டத்தில் ரூ.420.73 டாக் டைம் சேவையை பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதை திட்டங்கள் இரண்டிலும் டேட்டா சேவை மற்றும் இலவச எஸ்.எம்.எஸ் கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் அதிக டாக் டைம் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.