மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும்
துபாயில் உள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம் பேகேஜ் கட்டணத்தை மாற்றுவதாக அறிவித்துள்ளது.இது அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரும்.புதிய இலவச பேக்கேஜ் களை எக்கானமி பயணிகளுக்காக கொண்டுவருகிறது, சமீபத்தில் விமான டிக்கெட் வகைகளை நான்கு டிக்கெட் வகைகளாக பிரித்து : ஃப்பெஷல் ,சேவர், ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் ப்ளஸ் என்று கொண்டுவருகிறது .
எமிரேட்ஸ் சுற்றறிக்கையின்படி, பல கட்டண வகைகள் 5 கி.கி. எடை குறைக்கப்படுகின்றன.
பிப்ரவரி 4 முதல், ஃப்பெஷல் மற்றும் சேவர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முறையே 15 கி.கி மற்றும் 25 கி.கி வரை கொண்டு செல்லலாம்.ஆனால் முன்பு இந்த டிக்கெட்டுகள் 20 கி.கி மற்றும் 30 கி.கி. வாக இருந்தது . ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் பிளஸ் பேகேஜ் அளவுகள் அனைத்தும் பழையதுபோலவே இருக்கும்.
பிப்ரவரி 4 க்கு முன்னர் வழங்கப்பட்ட டிக்கெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழைய பேகேஜ் அளவுகளில் தொடர்ந்து பின்பற்றும்