இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி 4வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 252 ரன்கள் சேர்த்தது.
பின்னர் இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி தொடரையும் வென்றது. போட்டியை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.