ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை மராட்டிய ஏடிஎஸ் கைது செய்தது

மராட்டியத்தில் சிலர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒரு சிறுவன் உள்பட 9 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 22-ந் தேதி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 9 பேருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தானே மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களை சேர்ந்த அவர்கள் மோஷின் சிராஜூதின் கான், தாக்யு சிராஜூதின் கான், முசாகித் உல் அஸ்லாம், முகமத் சர்பராஸ், சல்மான் சிராஜூதின் கான், சமான் குதேபாத், பாகத் அன்சாரி மற்றும் ரஷீத் மல்பாரி என்பது தெரியவந்தது. கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினீயர்கள். ஒருவர் மருந்து துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

மற்றொருவன் 17 வயது சிறுவன்.இவன் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இவர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இவர்கள் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சி மற்றும் திருவிழாக்களை குறிவைத்து அங்கு வினியோகிப்படும் குடிநீர் மற்றும் உணவில் கொடிய ரசாயனத்தை கலந்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இப்போது இக்கும்பலுடன் தொடர்புடைய தானே நபரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

Share This News

Related posts

Leave a Comment