நேற்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை 15பேர் கொண்ட குழு வெளியிட்டுள்ளது. அதில் வடகொரிய அணுஆயுதங்களை பாதுகாக்கிறது எனவும்,அவற்றை எந்த ராணுவத்தாலும் அழிக்க முடியாதவாறு அந்நாடு வைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம்முடனான உறவில் முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு வடகொரியா தரப்பில் இன்னும் பதில் தரப்படவில்லை, முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதணைகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
இருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகiணை சோதனைகளை நடத்தி வருகிறது.
ட்ரம்ப்-கிம் இடையே சிங்கப்பூரில் நடந்த சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வடகொரியா தொடர்ந்து அதிநவீன அணுஆயுதங்களை பாதுகாக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும்-வடகொரிய அதிபர் கிம்மும் மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது