2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது.சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதில் முக்கியமாக
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
.ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைவார்கள்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.