சிறுமி விவகாரத்தில் நடிகை பானுப்ரியா விளக்கம்!

நடிகை பானுப்ரியா தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமியைக் கொடுமை படுத்துவதாகச் சிறுமியின் தாய் ஆந்திராவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் செய்திதான் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது

சிறுமியின் தாய் பிரபாவதி அளித்த புகார் மனுவில், “ ‘கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக என் மகளை நடிகை பானுப்ரியா சென்னை அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் செல்வதற்கு முன்பு 10,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஒரு மாதம்கூட சம்பளம் வழங்கவில்லை. என் மகளைப் பார்ப்பதற்காகக் கடந்த 19-ம் தேதி நான் சென்னை சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் மகளைப் பார்க்கவிடவில்லை. என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார்அவரிடமிருந்து என் மகளை மீட்டுத்தாருங்கள்என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நடந்தவற்றை தெரிந்துகொள்ள நடிகை பானுப்ரியாவிடம் பேசினோம், “கடந்த ஒரு வருடமாக 16 வயதுள்ள சிறுமி என் வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் எங்கள் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் ஆபரணங்களைத் திருடி மறைமுகமாகத் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். இது தெரிந்த நாங்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம் எனச் சிறுமியின் தாயிடம் கூறினோம்.

அப்படி எதுவும் செய்ய வேண்டாம் நான் அனைத்துப் பொருள்களையும் திருப்பித் தருகிறேன் எனப் பிரபாவதி எங்கள் காலைப் பிடித்து அழுதார். அதனால் நாங்கள் அவர்கள் மீது புகார் அளிக்காமல் இருந்தோம். இங்கிருந்து சொந்த ஊருக்குச் சென்ற அவர் முழுவதுமாக மாற்றி எங்கள் மீது பொய் புகார் தெரிவித்துவிட்டார். திருடிய சில பொருள்களை மட்டுமே அவர் திருப்பிக் கொடுத்தார். ஆபரணங்கள், பணம் போன்றவற்றை இன்னும் அவர் தரவில்லை. இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, நேற்று காவலர்களும் குழந்தைகள் நலப் பிரிவினரும் வந்து அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டனர்” எனக் கூறினார்.

 

Share This News

Related posts

Leave a Comment