இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் `சாலா’ நடித்திருக்கும் திரைப்படம் `பக்ரீத்’. இப்படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர்.
https://www.youtube.com/watch?v=6sw_5rbi3Hg
இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
வேறு இடத்தில் உள்ள ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் டீசர் காட்டுகிறது