அயர்லாந்தில் உள்ள இந்தியர்களின் மதுகுடிக்கும் பழக்கத்தை குறைக்க HSE முயல்கிறது

அயர்லாந்தில் குடியேறியவர்கள் பலருக்கும் குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில். எனவே, HSE குடியினால் ஏற்படும் தோஷங்களை பற்றி அம்பலப்படுத்துவதற்கான முன்முயற்சியை ஆரம்பிக்கும். இதற்காக ஒரு புதிய குழுவை நமது ஆட்களையும் சேர்த்து ஏற்பாடு செய்வதற்கு எச்எஸ்இ தயாரெடுக்கிறது. இந்த வகையான திட்டம் தற்போது போலந்திலிருந்து வந்தவர்களுக்கு இடையில் HSE ஆல் செயல்படுத்தப்படுகிறது. டி-அடிக்சன் கருத்தரங்குகள் நடத்த ஏற்ப்பாடு செய்ய திட்டமிடுகின்றனர். நம்மில் அநேகர் அவமானம் பயந்து யாரிடமும் சொல்லவதில்லை. இத்தகைய திட்டம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம்மில் பலரும் இப்போது தங்கள் குடும்பத்தில் இந்த பிரச்சனையை கூற முற்படுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வரும் போது இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்தியாவில் இருந்து இங்கு குடியேறிய பலரும் ஒரு வருடம் இங்கு குடிக்கும் மதுவின் அளவு…

Read More

தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தான்: முஷாரப் ஒப்புதல்

காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தான், என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கொடூரமானது தான். இதில் சந்தேகம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மீது எனக்கு கருணை இல்லை. அவன் என்னை கொல்ல திட்டம் தீட்டினான். ஆனால், காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கருணை இருக்காது. தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருக்கும் என நான் நம்பவில்லை. சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததாக இந்தியா சொல்கிறது. இது தவறு. சர்ஜிக்கல் தாக்குதல் எதுவும்…

Read More

கேரள ரீ-பில்ட் எக்ஸலன்ஸ் விருது ஹைபி ஈடன் அவர்களுக்கு !!!

டப்ளின் : பிப்ரவரி 15 வெள்ளிக்கிழமை 2019 டுப்லினில் உள்ள தாலாவில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் , “கேரளா மறுசீரமைப்பு சிறப்பு விருது” வென்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது.காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அயர்லாந்தின் இளைய ஐரிஷ் எம்.பி.(T .D ) யாய டெப்பூய்ட்டி ஜேக் சேம்பர்ஸ் இந்திய தூதரகத்தின் கவுன்சிலர் சோம்நாத் சாட்டர்ஜி யும் சேர்ந்து அறிவித்தனர். 2018 ல் கேரளாவை தாக்கிய வெள்ளப் பேரழிவிலிருந்து பொதுமக்களின் மறுவாழ்வுக்காக அயராது உழைத்துக்கொண்டு இருப்பவர்களில் இருந்து இதன் வெற்றியாளர் தேர்தெடுக்கப்பட்டார். பொதுமக்களின் மறுவாழ்வுக்காக அவர்கள் செய்யும் பணியே இந்த விருது குழுவின் முழு அளவுகோலாக இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டப்ளினில் நடைபெறும் பிரமாண்ட விருதுவழங்கும் விழாவில் ஸ்ரீ ஹைபி ஈடன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.…

Read More

முகாமில் அடைக்க விடை பெற்றது, சின்னத்தம்பி

கோவை, சின்னத்தடாகம் பகுதிகளில், ஜன., 25ல், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானையான, சின்னத்தம்பி, 31ம் தேதி இரவு அங்கிருந்து கிளம்பி, பொள்ளாச்சி, உடுமலை என பயணம் செய்து. கண்ணாடிபுத்துாரில் ஒரு வாரமாக, கரும்புக்காட்டிற்குள் பதுங்கியிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், பத்திரமாக பிடித்து, முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ‘சின்னதம்பி -2’ ஆப்பரேஷனை வனத்துறையினர் துவக்கினர். காலை, 7:50க்கு, சின்னத்தம்பிக்கு, மூன்று திசைகளிலிருந்தும், துப்பாக்கி மூலம், மயக்க மருந்து செலுத்த முயற்சி நடந்தது. ஒன்று மட்டும் காலில் பட்டது; மற்றொரு கரும்பு காட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்தும் முடுக்க முயற்சித்த போது, வெளியில் வர மறுத்து, காலை, 9:30க்கு, வலது கால் தொடையில், நான்காவது முயற்சியில் சரியாக மயக்க ஊசியை செலுத்தினர். பிளிறல் சத்தத்துடன், மீண்டும் கரும்புக்காட்டிற்குள் சென்று,…

Read More

மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன?

தெற்கு காஷ்மீரில் இருக்கும் புல்வாமா பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 37 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 வண்டிகளில் சுமார் 2547 வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். எங்கிருந்தோ வந்த கார் நேரடியாக அந்த பேருந்து மீது மோதியதில் பேருந்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. அப்பகுதியில், நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் “மிகப் பெரிய அதிர்வினை உணர்ந்ததாகவும் . மிக சத்தமாக இருந்ததாகவும் ,அமர்ந்திருந்த இடத்தில் இருந்து தூக்கி வீசப்படும் அளவிற்கு சக்தி வாய்ந்த தாக்குதலாக இது இருந்தது. என்றும் கூறினார்கள். பத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அகமது தார் என்பவர் 350…

Read More

காந்திஜி ன் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று டப்ளினில்

காந்திஜி ன் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று டப்ளின்,  தாலாவில் உள்ள பிளாசா ஹோட்டலில் நடத்தப்படுகிறது. காந்திஜியின் 150 வது பிறந்த நாள்  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளால் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இத்துடன் OICC அயர்லாந்து சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகள் இன்று 15 பெப்ருவரி 2019  வெள்ளிக்கிழமை 4 மணிக்கு பிளாசா ஹோட்டலில் ஆரம்பமாகும். போட்டிகள் முடிந்தபின்  இந்திய மற்றும் ஐரிஷ் பிரபலங்களை உள்ளடக்கிய மேடையில் போட்டியில் ஜெயித்தவர்களுக்கான பரிசுகள்  வழங்கப்படும்.3-9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கலரிங் போட்டியும்  10- 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  ஓவிய  போட்டியும் நடைபெறும் கலரிங் மற்றும் பேய்ட்டிங் போட்டிக்கான கிட்டுகள் ஸ்பான்ஸர் செய்திருப்பது  அயர்லாந்தில் உள்ள இந்தியன் எம்பசி ஆகும். இதற்க்கு உறுதுணையாக இருந்த இந்தியன் அம்பாஸிடர்க்கு OICC அயர்லாந் சென்ட்ரல் கம்மிட்டி மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறது.…

Read More

தொழிலாளர் நீதிமன்ற பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதற்கு INMO ஆதரவு.

ஐரிஷ் செவிலியர்கள் மற்றும் குடும்ப நல அமைப்பு ஆகியவை ஊதியம் மற்றும் நிபந்தனைகளின் மீது தங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான நோக்கில் தொழிலாளர் நீதிமன்ற பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார சேவை நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தபின், இந்த வாரம் மூன்று நாட்கள்  நடத்தப்பட வேண்டிய வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது. ஐஎம்ஓஓ நிர்வாகி இன்று சந்தித்து, அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளும் என்று பரிந்துரைக்கிறார். மார்ச்11கும் 25 கும்  இடையே  வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்களிக்கும் முன் அதன் உறுப்பினர்கள் முழு முன்மொழிவுகளை உறுதி செய்வதற்கு, வரவிருக்கும் வாரங்களில் பிராந்திய மற்றும் பணியிட அடிப்படையான தகவல் அமர்வுகள் நடத்தப்படும் என்று ஒரு அறிக்கையில், INMO தெரிவித்தது. ஜெனரல் செக்கரெட்ரி பில் நி சேக்தா கூருவது : “இந்தத்…

Read More

ஒட்டகம் பற்றிய படம் `பக்ரீத்’ ன் டீசர் ரிலீசானது

இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் `சாலா’ நடித்திருக்கும் திரைப்படம் `பக்ரீத்’. இப்படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். https://www.youtube.com/watch?v=6sw_5rbi3Hg இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். வேறு இடத்தில் உள்ள ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் டீசர் காட்டுகிறது

Read More

கேரட் ஊறுகாய் செய்வது எப்படி

கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் தேவையான பொருட்கள் கேரட் – 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது ) எலுமிச்சை பழம் – ஆறு பச்சை மிளகாய் – இருபது (பொடியாக வெட்டியது ) பெருங்காயம் – ஒரு தேகரண்டி மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி கடுகு – 1 1/2 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து இவற்றுடன் கேரட் கலவையை கொட்டி கிளறி எடுத்தால் கேரட் ஊறுகாய் ரெடி.

Read More