இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் 1 /3/2019 இரவு 9 மணிக்கு இந்திய எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகளிடம், பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.