இந்தோனேஷியாவில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம், கடந்தாண்டு விபத்துக்கு ள்ளானதில், 189 பேர் பலியாகினர். சமீபத்தில், இதே ரக விமானம், எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில், 157 பேர் உயிரிழந்தனர்.இதனால், இந்த ரக விமானங்களின் இயக்கத்துக்கு, பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட நாடுகள், தடை விதித்தன. நம் நாட்டிலும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவை நிறுத்தப்படுவதாக, விமான போக்குவரத்து துறை அறிவித்தது.போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பும் தடை விதித்துள்ளார்.அமெரிக்கர்களின் நலனுக்காகவே இந்த முடிவு என தெரிவித்தார். மேலும் போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரினை அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
Read More