2019 மார்ச் 29 அன்று பிரெக்சிட் நிலவில் வந்தபிறகு நீங்கள் நோர்தன் அயர்லாந்திற்க்கோ அல்லது யு.கெ க்கோ நீங்கள் செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் கவனமாக இருங்கள். அயர்லாந்து ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் வட அயர்லாந்திலும் அல்லது யு.கெ யிலும் சவாரி செய்ய முடியாது.
ஒப்பந்தம் இல்லாத பிரெக்சிட் தான் வருகிறது என்றால் மோட்டார் காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் “பச்சை அட்டை” என்று அழைக்கப்படும் ஒரு அட்டை இருந்தால் தான் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தில் செல்லமுடியும்.
வட அயர்லாந்திலும் பிரிட்டனிலும் செயல்படும் காப்பீட்டை உறுதிசெய்யவதுதான் இந்த “பச்சை அட்டை”. பல்வேறு மோட்டார் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தரகர்கள் ஆகியவற்றிற்கான 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சை அட்டைகள் அயர்லாந்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவுக்கு (MIBI) ஆல் அனுப்பப்பட்டுள்ளன.
காப்பீட்டு நிறுவனங்கள் இதை மார்ச் முதல் மாதத்தில் இருந்து ஓட்டுனர்களிடம் கொடுத்து துடங்குகிறது.யு.கெ க்கு பயணிப்பவர்கள் ஒரு மாதம் முன்பு பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அப்படி செய்தால் மட்டும் தான் நீங்கள் பிளான் செய்த நாட்களுக்கு முன்பு கிரீன் கார்ட் உங்கள் கையில் கிடைக்கும்.
பச்சை அட்டை குறைந்தபட்சம் 15 நாட்கள் மதிப்புள்ளதாக இருக்கும்.ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு காலம் முடிவடையும் வரை, பச்சை அட்டைக்கான அதிகபட்சம் செல்லுபடியாகும்.
மார்ச் 1 முதல்மட்டுமே கிரீன் கார்டுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.இதற்க்கு எவ்வளவு பீஸ் என்பது இன்னும் தெரியவில்லை.எனினும் அவ்வாறு இருப்பின் அது அவர்களின் ஓட்டுநர் காப்பீட்டு வரலாறு படி தான் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.