அயர்லாந்தில் குடியேறியவர்கள் பலருக்கும் குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில். எனவே, HSE குடியினால் ஏற்படும் தோஷங்களை பற்றி அம்பலப்படுத்துவதற்கான முன்முயற்சியை ஆரம்பிக்கும். இதற்காக ஒரு புதிய குழுவை நமது ஆட்களையும் சேர்த்து ஏற்பாடு செய்வதற்கு எச்எஸ்இ தயாரெடுக்கிறது.
இந்த வகையான திட்டம் தற்போது போலந்திலிருந்து வந்தவர்களுக்கு இடையில் HSE ஆல் செயல்படுத்தப்படுகிறது. டி-அடிக்சன் கருத்தரங்குகள் நடத்த ஏற்ப்பாடு செய்ய திட்டமிடுகின்றனர். நம்மில் அநேகர் அவமானம் பயந்து யாரிடமும் சொல்லவதில்லை. இத்தகைய திட்டம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம்மில் பலரும் இப்போது தங்கள் குடும்பத்தில் இந்த பிரச்சனையை கூற முற்படுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வரும் போது இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
இந்தியாவில் இருந்து இங்கு குடியேறிய பலரும் ஒரு வருடம் இங்கு குடிக்கும் மதுவின் அளவு அவர்கள், நாட்டில் குடிக்கும் அளவைவிட மிகவும் அதிகம் என்று இங்கு உள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்க்கு இங்கு உள்ள மிகையான வாழ்க்கைமுறை,மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி உள்ள கொண்டாட்டங்களும் இதற்க்கு முக்கிய காரணமாக ஆய்வறிக்கைகள் குறுகின்ற்றன.
பார்ட்டிகளும் நண்பர்களுடன் உள்ள விழாக்களும் பெண்களில் சிலர் மதுவைப் பயன்படுத்த காரணமாகின்றது.வைனில் இது ஆரம்பம் ஆகிறது.வைன் நல்லதுதான் ஆனால் அமிர்தம் கூட அதிகமாக இருந்தால் அது விஷமாகும்.
மது ஒரு போதை பொருள் ஆகும் இது மனதையும் மனநிலையையும் பாதிக்கக்கூடியது. மனதை உறக்கும் விஷமாக மது மறுகிறதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதிக எடை அதிகரிக்கிறது:
பீர் ஒரு குவளையை குடிப்பது ஒரு துண்டு பேப்பரோணி பீஸ்ஸாவைப் போலாகும்.
ஆல்கஹால் மற்றும் உங்கள் குடும்பம்:
அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வேறொருவரின் தீங்கு விளைவிக்கும் குடிப்பழக்கத்தின் விளைவுகளில் வாழ்கின்றனர். எல்லோரும் தங்களுக்கு தெரிந்த முறையில் அதை எதிர்க்கிறார்கள்.ஆனால் அதற்க்கு பலன் இல்லை என்பதால் அதை சகிக்கிறார்கள் என்பதே உண்மை.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களில், மதுபானம் மறைக்கப்பட்ட தீங்கு(hidden harm) என்று அறியப்படுகிறது.பலரும் இதை பற்றி பேச தயகிக்குகிறார்கள் என்பதே உண்மை.வெளியில் இருந்து பார்க்க சந்தோஷமாக இருக்கும் பல குடும்பங்கள் இன்று மது பழக்கத்தால் உள்ள பல பிரச்சினைகள் எதிர்கொள்கிறார்கள்.
குழந்தைகளை இது எப்படி பாதிக்கிறது:
சிந்தனை சிக்கல்கள், தொல்லை, அவமானம்
கீழ்ப்படிதல் இல்லாமை
மூத்த பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.
சிக்கல்களுக்குள் சென்று சிக்கிக்கொள்வது.
நம்பிக்கைக்கு மாறாக வளர்ந்து வருவது
உணர்வுப்பூர்வமான (கோபம்) பிரச்சினைகள்
புறக்கணிப்பு அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்சினைகள்
மது மற்றும் ஓட்டுநர்:
ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் வாகனம் ஓட்டும் நம் திறனை பாதிக்கிறது.ஆல்கஹால் நம் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும்
– முடிவெடுக்கும் நேரம்
– ஒருங்கிணைப்பு
– கவனம்
– ஒரு முடிவை எடுக்கும் திறன்
– பார்வை
குடிப்பழக்கங்களில் ஏற்படும் விபத்துக்கள் அதிகமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி க்கும் இடையில் நடக்கிறது. இதன் அர்த்தம் முதல்நாள் குடித்த ஆல்கஹால் மறுநாள் மதியம் வரை நமக்குள் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
மது மற்றும் அயர்லாந்:
– ஆல்கஹால் ஒவ்வொரு ஆண்டும் 1000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் ஏற்படுகின்றன. அதாவது ஒரு நாளைக்கு 3 மரணம்.
– அயர்லாந்தில் 15-39 வயதிற்கு உற்பட்ட இறப்புகளுக்கு காரணம் ஆல்கஹால் ஆகும்.
– அயர்லாந்தில் 15-39 வயதிற்கு உற்பட்டவர்களில் கல்லீரல் நோய் அதிகரித்து வருவதற்கு கரணம் ஆல்கஹால் ஆகும்.
– அயர்லாந்தில் 900 க்கும் அதிகமானோர் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதில் 500 பேர் மரணத்துக்கு இது கரணமாகிறது.
– மூளை மரணம் ஏற்படுகிறது.
– ஐரிஷ் தற்கொலைகளில் பாதியும் மது அருந்துதல் மூலம் நடக்கிறது.
– ஐரிஷ் சாலைகள் 5 இறப்புகளில் இரண்டு ஆல்கஹால் மூலம் நடக்கிறது.
– மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 படுக்கைகள் ஆல்கஹால் மூலம் உள்ள நோய்கள் உள்ளவர்களால் நிரப்பபப்படிகிறது.
இதற்க்கெல்லாம் தீர்வு காணும் விதமாக HSE புதிய அமைப்பை உருவாக்குகிறது.இந்த திட்டம் இந்திய மக்களின் பங்களிப்பும் மற்றும் பல இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடனும் செயல்பட போகிறது.மிகவிரைவில் இதைப் பற்றிய மேலும் விவரங்கள் HSE ஆல் வெளியிடப்படும்.